46 கோவில்களில் நாளை குடமுழுக்கு - அமைச்சர் சேகர்பாபு பேட்டி

கோப்புப்படம்
முருகருக்கு பெருமை சேர்த்தவர் தமிழக முதல்வர் என அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
ஈரோடு,
ஈரோடு அடுத்த திண்டலில் உள்ள வேலாயுத சுவாமி திருக்கோவிலில் ஆசியாவிலேயே 186அடி உயர முருகர் சிலை 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படுகிறது. இக்கோவிலில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் தமிழக வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். அதைத் தொடர்ந்து அமைச்சர் முத்துசாமி மற்றும் சேகர் பாபு ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது அமைச்சர் சேகர்பாபு பேசுகையில்,
"46 கோவில்களில் நாளை குடமுழுக்கு நடைபெறுகிறது. 1,120 கோடி ரூபாய் அரசு மானியத்தில் தமிழ் கடவுளுக்கு 124 கோவில்களில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. திருச்செந்தூர் கோவில் பணிகள் 14 ஆண்டுகளுக்கு பின்னர் எச்சிஎல் நிறுவனத்தின் 200 கோடி உடன் சேர்ந்த பணிகள் முடிந்துள்ளது. 110 படிகள் உள்ள மருதமலை கோவிலில் மின் தூக்கி பணிகள் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
முருகருக்கு பெருமை சேர்த்தவர் தமிழக முதல்வர். புனித மார்கத் தோற்றத்தோடு ஆசியாவிலேயே பெரிய சிலையை திண்டல் கோவிலில் அமைக்க உள்ளோம். இங்கு மிகப்பெரிய சிலை வைத்தால் என்ன? என்று எனக்கு தோன்றியது.
உயரமான சிலை வலுவாக இருக்க வேண்டும், என்ற அடிப்படையில் ஏற்பாடுகள் செய்கிறோம். சிறப்பாக பணிகள் செய்யப்படுகிறது. கோவிலுக்கு பல வழிகளை உருவாக்க உள்ளோம். பார்க்கிங் குளறுபடிகள் இல்லாமல் அதற்கான நிலம் விரைவில் கையகப்படுத்தப்படும், சிமெண்ட் பயன்படுத்தி, கீழ் புறத்தில் கற்கள் கொண்டு சிலை நிறுவப்படும்."
இவ்வாறு அவர் பேசினார்.






