நெல்லை மாவட்டத்தில் 46.42 சதவீதம் எஸ்.ஐ.ஆர். படிவங்கள் இணையதளத்தில் பதிவேற்றம்: கலெக்டர் தகவல்


நெல்லை மாவட்டத்தில் 46.42 சதவீதம் எஸ்.ஐ.ஆர். படிவங்கள் இணையதளத்தில் பதிவேற்றம்: கலெக்டர் தகவல்
x

மானூர் வட்டம் வாகைகுளம், உக்கிரன்கோட்டை ஊராட்சிகளில் எஸ்.ஐ.ஆர். படிவங்களை BLO மொபைல் செயலில் பதிவேற்றம் செய்யும் பணிகளை மாவட்ட கலெக்டர் சுகுமார் ஆய்வு செய்தார்.

திருநெல்வேலி

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையமானது 1-1-2026ஐ தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தினை (எஸ்.ஐ.ஆர்.) மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது. அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டு படிவங்களை BLO மொபைல் செயலில் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 கணக்கீட்டு படிவங்களை நிரப்பி வழங்கிட வாக்காளர்களுக்கு உதவி செய்யும் விதமாக இன்றைய தினம் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அந்தந்த வாக்குச்சாவடி மையங்கள் அமைந்துள்ள இடங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக திருநெல்வேலி மாவட்டத்தில் மானூர் வட்டம் வாகைகுளம் ஊராட்சி மற்றும் உக்கிரன்கோட்டை ஊராட்சியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டு படிவங்களை BLO மொபைல் செயலில் பதிவேற்றம் செய்யும் பணி தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான சுகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர், திருநெல்வேலி மாவட்டத்தில் 24.11.2025 மாலை 4 மணி வரை 6 லட்சத்து 58 ஆயிரத்து 344 கணக்கீட்டு படிவங்கள், அதாவது 46.42 சதவீதம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நாளையும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் போன்ற இடங்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், மற்றும் தன்னாவலர்கள் மூலம் BLO மொபைல் செயலில் பதிவேற்றம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார்.

1 More update

Next Story