4-ம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷம்: பரோட்டா மாஸ்டா் போக்சோவில் கைது

கோப்புப்படம்
4-ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பரோட்டா மாஸ்டரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே உள்ள நரால் சந்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் குணசீலன் (35 வயது). இவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இவர் ஓட்டல்களில் பரோட்டா மாஸ்டராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று அப்பகுதியில் 9 வயதுடைய 4-ம் வகுப்பு மாணவி தனியாக நடந்து வந்தாள்.
அப்போது அந்த மாணவியை தனியாக அழைத்துச் சென்று பட்டாசு வாங்கி தருவதாக கூறி பரோட்டா மாஸ்டர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. உடனே அங்கிருந்து அழுது கொண்டே சென்ற அந்த பள்ளி மாணவி வீட்டுக்கு சென்று நடந்த விவரங்களை கூறி உள்ளாள்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதுகுறித்து மத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் பரோட்டா மாஸ்டர் குணசீலன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் அவரை கைது செய்தனர்.






