தமிழகத்தில் 5.25 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிப்பு - சுகாதாரத்துறை

நாய்க்கடியால் நடப்பு ஆண்டில் 28 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக நாய்க்கடி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து, தெருநாய்கள், வீட்டில் வளர்க்கப்படும் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதேவேளை, நாய்க்கடியால் பலர் பாதிக்கப்பட்டு, உயிரிழப்பு சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
இந்நிலையில், தமிழகத்தில் நடப்பு ஆண்டில் இதுவரை 5.25 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், நாய்க்கடியால் நடப்பு ஆண்டில் 28 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, தமிழகத்தில் கடந்த ஆண்டு 4.80 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், 28 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






