தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 4 ரவுடிகள் உட்பட 7 பேர் கைது


தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 4 ரவுடிகள் உட்பட 7 பேர் கைது
x

தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் சந்தேகப்படும் வகையில் ஆயுதங்களுடன் வாலிபர்கள் சுற்றித் திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் சந்தேகப்படும் வகையில் ஆயுதங்களுடன் வாலிபர்கள் சுற்றித் திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜா தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். பாலதண்டாயுதநகர் பகுதியில் ரோந்து பணிக்கு சென்றபோது அங்கு சந்தேகப்படும்படி நின்ற வாலிபர்களை பிடித்து போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர்களிடம் அரிவாள், கத்தி உள்ளிட்ட பல்வேறு பயங்கர ஆயுதங்கள் இருந்தது தெரியவந்து.

இதனையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் பாலதண்டாயுதநகர் பகுதியைச் சேர்ந்த சண்முகவிக்னேஷ் (வயது 29), கௌதம்கண்ணன்(21) ரமேஷ்(எ) ரமேஷ்கண்ணன்(22), மாப்பிள்ளையூரணி சச்சின்(23) என்பதும், இவர்கள் மீது கொலை உட்பட பல்வேறு குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரவுடி பட்டியலில் இருந்து வருவதும் தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் தாளமுத்துநகர் பஜார் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அலங்காரதட்டு மீனவர் காலனியைச் சேர்ந்த அந்தோணிஜெகன்(20) லூர்தம்மாள்புரம் முகேஷ்(22 ) மற்றும் வெள்ளப்பட்டி அய்யனார்புரம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை விற்பனை செய்த முருகன்(37) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

1 More update

Next Story