முடிச்சூர் ஏரியில் குளிக்கச்சென்ற 10-ம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி பலி


முடிச்சூர் ஏரியில் குளிக்கச்சென்ற 10-ம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி பலி
x

தாம்பரம் அருகே ஏரியில் குளிக்கச்சென்ற 10 வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சென்னை,

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே, புத்தர் நகரை சேர்ந்த ஹரிஹரன் என்ற 10ஆம் வகுப்பு மாணவன், தனது நண்பர்களுடன் முடிச்சூர் ஏரியில் குளிக்கச்சென்றுள்ளார். அப்போது. எதிர்பாராத விதமாக ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்றதால், நீரில் மூழ்கி மாயமானார்.

இது குறித்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர். நீண்ட நேரமாக போராடி ஹரிஹரனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

1 More update

Next Story