சென்னை விமான நிலையத்தில் நகரும் படிக்கட்டில் 3 வயது குழந்தையின் கை சிக்கியதால் பரபரப்பு


சென்னை விமான நிலையத்தில் நகரும் படிக்கட்டில் 3 வயது குழந்தையின் கை சிக்கியதால் பரபரப்பு
x

காயமடைந்த குழந்தைக்கு விமான நிலைய மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

சென்னை,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் செல்வதற்காக ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தம்பதி, தங்கள் 2 குழந்தைகளுடன் வந்தனர். அவர்கள் விமான நிலையத்தில் இருந்த நகரும் படிக்கட்டில்(எஸ்கலேட்டர்) சென்று கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக அவர்களது 3 வயது குழந்தையின் கை விரல் அந்த நகரும் படிக்கட்டில் சிக்கிக் கொண்டது. இதையடுத்து அலறல் சத்தம் கேட்டு விமான நிலைய ஊழியர்கள் உடனடியாக நகரும் படிக்கட்டை நிறுத்தினர். பின்னர் காயமடைந்த குழந்தைக்கு விமான நிலைய மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர். அதோடு, அந்த தம்பதியின் விமான பயணம் ரத்து செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story