நடக்கவே கூடாத துயரம் நடந்துவிட்டது : சீமான் வேதனை


நடக்கவே கூடாத துயரம் நடந்துவிட்டது : சீமான் வேதனை
x
தினத்தந்தி 28 Sept 2025 1:49 PM IST (Updated: 28 Sept 2025 1:57 PM IST)
t-max-icont-min-icon

கூட்ட நெரிசல் சம்பவத்தில் 40 பேர் உயிரிழந்து உள்ளனர்.

கரூர்,

கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். விஜய் பேசி முடித்து புறப்பட்ட பின்னர், கூட்டம் கலைந்து செல்லும்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் 40 பேர் உயிரிழந்து உள்ளனர்.

மேலும் பலர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரூரில் நிகழ்ந்த இந்த துயர சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது.

இந்த நிலையில் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சீமான் கூறியதாவது,

கரூரில் துடைக்க முடியாத பெருந்துயரம் நிகழ்ந்துவிட்டது. உறவுகளை இழந்தவர்களுக்கு எப்படி ஆறுதல் சொல்வது? என்று தெரியவில்லை. நடக்கவே கூடாத துயரம் நடந்துவிட்டது. யாரையும் குறை சொல்லி பயனில்லை. இனி இதுபோல் நிகழாமல் தவிர்க்க வேண்டும்.என தெரிவித்தார்

1 More update

Next Story