பரபரக்கும் அரசியல் களம்... தமிழ்நாடு பாஜகவுக்கு பொறுப்பாளர்கள் நியமனம்


பரபரக்கும் அரசியல் களம்... தமிழ்நாடு பாஜகவுக்கு பொறுப்பாளர்கள் நியமனம்
x
தினத்தந்தி 25 Sept 2025 2:58 PM IST (Updated: 25 Sept 2025 3:06 PM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கான பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை,

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் களம் தற்போதே சூடுபிடித்துள்ளது.திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், தேமுதிக, விசிக, மதிமுக, பாமக, தவெக உள்பட பல்வேறு கட்சிகள் தற்போதே தேர்தல் நடவடிக்கைகளை தொடங்கி விட்டன.தற்போதைய நிலையில் 4 முனைப் போட்டி நிலவுகிறது. அதாவது, தி.மு.க. தலைமையில் ஒரு அணி, அதிமுக - பாஜக அணி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவை களம் காண்கின்றன.

இந்த நிலையில் , தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கான பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் பொறுப்பாளராக பைஜயந்த் பாண்டா (தேசிய துணைத் தலைவர்), இணை பொறுப்பாளராக முரளிதர் மொஹோல் (மத்திய இணைமந்திரி ) நியமிக்கப்பட்டுள்ளனர்.

1 More update

Next Story