திருப்பூரில் காவலரைக் கத்தியால் தாக்க முயன்ற வாலிபரால் பரபரப்பு


திருப்பூரில் காவலரைக் கத்தியால் தாக்க முயன்ற வாலிபரால் பரபரப்பு
x
தினத்தந்தி 30 Dec 2025 9:07 PM IST (Updated: 30 Dec 2025 9:11 PM IST)
t-max-icont-min-icon

அங்கிருந்த மற்ற காவலர்கள் அந்த வாலிபரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

திருப்பூர்,

திருப்பூர் அரிசி கடை வீதி வீரராகவ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவினை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்தனர். கூட்டத்தை கட்டுப்படுத்த பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்தனர்.

காவல்துறையினர் கூட்டத்தை கட்டுப்படுத்திக்கொண்டிருந்தபோது அங்கு வந்த வாலிபர் காவலர் ஒருவரை கத்தியை கொண்டு குத்துவது போல மிரட்டல் விடுத்துள்ளார். இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

வாலிபர் தன்னை தாக்க வருவதை கண்டு சுதாரித்துக்கொண்ட காவலர் தனது பெல்ட்டை கழற்றி அதன் மூலம் வாலிபர் தாக்காதவாறு தடுத்தார். இதனையடுத்து அங்கிருந்த மற்ற காவலர்கள் அந்த வாலிபரை சுற்றி வளைத்து கைது செய்தனர். தொடர்ந்து தாக்க வந்த வாலிபர் யார்? எனவும் வாலிபர் போதையில் காவலரை தாக்க முற்பட்டாரா? எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவலரை வாலிபர் ஒருவர் கத்தியால் குத்த முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்த வீடியோ காட்சி இணையதளத்தில் பரவி பார்ப்பவர்களின் மனதை பதைபதைக்க வைக்கிறது.

1 More update

Next Story