நெல்லை-தாம்பரம் சிறப்பு ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு


நெல்லை-தாம்பரம்  சிறப்பு ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
x

இந்த ரெயிலில் கூடுதலாக இரண்டு ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் சென்ற பயணிகள், சென்னை திரும்ப வசதியாக சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்து வருகிறது. அந்த வகையில், வரும் 18 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு ரெயிலை தெற்கு ரெயில்வே அறிவித்தது. நெல்லை-தாம்பரம் இடையே ஒரு வழி சிறப்பு ரெயிலாக இயக்கப்பட்டது.

நெல்லையில் இருந்து வருகிற 18-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 1 மணிக்கு புறப்பட்டு மதுரை, திண்டுக்கல், திருச்சி வழியாக தாம்பரம் வரும் ஒரு வழி சிறப்பு ரெயில் (வண்டி எண்.06178), மறுநாள் அதிகாலை 3 மணிக்கு தாம்பரம் வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த ரெயில்களுக்கான முன்பதிவு நேற்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கியது. தொடங்கிய சில நிமிடங்களில் இந்த ரெயிலுக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்தன.

இந்த நிலையில், நெல்லை-தாம்பரம் செல்லும் இந்த சிறப்பு ரெயிலில் கூடுதலாக இரண்டு பெட்டிகள் இணைக்கப்பட்டுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி, இந்த ரெயிலில் இரண்டு ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்டி அமைப்பு: 10 ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகள், 8 பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் மற்றும் 2 இரண்டாம் வகுப்பு பெட்டிகள்

1 More update

Next Story