தீயசக்தி திமுகவை வேரோடு அகற்றவேண்டும் என்பது அதிமுகவின் லட்சியம்: எடப்பாடி பழனிசாமி


தீயசக்தி திமுகவை வேரோடு அகற்றவேண்டும் என்பது அதிமுகவின் லட்சியம்: எடப்பாடி பழனிசாமி
x

தமிழக சட்டசபை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது

செங்கல்பட்டு

தமிழக சட்டசபை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன.

அந்த வகையில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அவர் இன்று செங்கல்பட்டில் பிரசாரம் மேற்கொண்டார். அதில் அவர் பேசியதாவது:-

திமுக ஒரு தீய சக்தி என்று கூறியவர் எம்.ஜி.ஆர்.. தீய சக்தி திமுகவை அகற்ற வேண்டும் என்று அதிமுகவை எம்.ஜி.ஆர். தொடங்கினார். தீய சக்தி திமுகவை தமிழகத்தில் அடியோடு வேரோடு அகற்ற வேண்டும் என்பது அதிமுகவின் லட்சியம். திமுகவை அகற்ற பல்வேறு காலகட்டங்களில் நடவடிக்கை எடுத்து வருகிறோம். திமுக ஆட்சி அகற்றப்பட இன்னும் 3 அமாவாசை நாட்கள் தான் உள்ளன’ என்றார்.

1 More update

Next Story