‘பொங்கலுக்கு பிறகு த.வெ.க.வின் திருப்புமுனை பார்த்து நாடே வியக்கும்’ - செங்கோட்டையன்


‘பொங்கலுக்கு பிறகு த.வெ.க.வின் திருப்புமுனை பார்த்து நாடே வியக்கும்’ - செங்கோட்டையன்
x

நாங்கள் களத்தில் இருக்கிறோமா, இல்லையா என்பது தேர்தல் முடிவுகள் மூலம் தெரியவரும் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தீவிரமாக தயாராகி வருகிறது. சமீபத்தில் அக்கட்சியில் இணைந்த மூத்த அரசியல்வாதி செங்கோட்டையனுக்கு த.வெ.க நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டது. த.வெ.க. பொதுக் கூட்டங்களில் அக்கட்சியின் தலைவர் விஜய், தி.மு.க. மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து பேசி வருகிறார்.

இந்த நிலையில், பொங்கலுக்கு பிறகு நாடே வியக்கும் அளவிற்கு திருப்புமுனை ஏற்படும் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நாங்கள் களத்தில் இருக்கிறோமா, இல்லையா என்பது தேர்தல் முடிவுகள் மூலம் தெரியவரும். பொங்கல் பண்டிக்கைக்கு பிறகு த.வெ.க.வின் திருப்புமுனையை பார்த்து நாடே வியக்கும்” என்று தெரிவித்தார்.

1 More update

Next Story