முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலில்தான் அதிமுகவும் பயணிக்கிறது - அமைச்சர் சேகர்பாபு


முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலில்தான் அதிமுகவும் பயணிக்கிறது - அமைச்சர் சேகர்பாபு
x

மூலக்கொத்தளம் விளையாட்டு அரங்கத்தின் பணிகளை அமைச்சர் சேகர்பாபு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சென்னை

சென்னை வால்டாக்ஸ் சாலை, தண்ணீர் தொட்டி தெரு மற்றும் அண்ணா பிள்ளை தெருவில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் சி.எம்.டி.ஏ. சார்பில் கட்டப்பட்டு வரும் ரத்த சுத்திகரிப்பு மையம், 700 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், சமுதாய நலக்கூடம், மாநகராட்சி அச்சகம் மற்றும் விளையாட்டுத் திடல் என "ஒருங்கிணைந்த வளாகம்" கட்டுமானப் பணிகளை இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதைத் தொடர்ந்து, ராயபுரம் சட்டமன்ற தொகுதியில், வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சி.எம்.டி.ஏ. சார்பில் மேம்படுத்தப்பட்டு வரும் மூலக்கொத்தளம் விளையாட்டு அரங்கத்தின் பணிகளையும் புதிய சமுதாய நலக்கூடத்தின் கட்டுமான பணிகளையும் அமைச்சர் சேகர்பாபு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வுகளின் போது பணிகளை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர ஒப்பந்ததாரர்கள் மற்றும் என்ஜினீயர்களை அறிவுறுத்தினார். பின்னர் அமைச்சர் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க. தேர்தல் வாக்குறுதி காணொளி வைரலாகச் சென்று கொண்டிருக்கிறது. சிந்தனையில் ஏதாவது இருந்தால் தானே புதிய திட்டங்களை சிந்திக்க முடியும். சிந்தனையில் ஒன்றுமே இல்லை. திமுக எதையெல்லாம் முன்னெடுக்கிறதோ, அதையே பின்தொடர்ந்து வந்து, அதில் ஒரு 10 சதவீதம் கூடுதலாக்குவது தான் அவர்களுடைய பணியாக இருக்கிறது. ஆகவே, முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலில்தான் அதிமுகவும் பயணிக்கிறது என்பதை இதிலிருந்து ஏற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story