எம்.ஜி.ஆர். சிலைக்கு செங்கோட்டையன் மாலை அணிவிக்க அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு


எம்.ஜி.ஆர். சிலைக்கு செங்கோட்டையன் மாலை அணிவிக்க அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு
x

மேட்டுப்பாளையத்தில் எம்.ஜி.ஆர். சிலைக்கு கே.ஏ.செங்கோட்டையன் மாலை அணிவிக்க அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை,

கோவை புறநகர் வடக்கு மாவட்ட த.வெ.க. சார்பில் மேட்டுப்பாளையத்தில் கட்சி அலுவலகத்தின் அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக கட்சியின் மாநில நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும், அமைப்பு செயலாளருமான கே.ஏ.செங்கோட்டையன் கோபியில் இருந்து காரில் மேட்டுப்பாளையம் நோக்கி வந்தார்.

அப்போது வரும் வழியில் பெத்திக்குட்டை, சிறுமுகை, ஆலாங்கொம்பு ஆகிய பகுதிகளில் கட்சி தொண்டர்கள் சார்பில் செங்கோட்டையனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆலாங்கொம்பு எம்.ஜி.ஆர். நகரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு கே.ஏ.செங்கோட்டையன் மாலை அணிவிக்க வந்தார். இதையறிந்த அப்பகுதியை சேர்ந்த அ.தி.மு.க.வினர் வந்து, எம்.ஜி.ஆர். சிலைக்கு செங்கோட்டையன் மாலை அணிவிக்க எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மாலை அணிவிக்காமல் ஏமாற்றத்துடன் அங்கிருந்து சென்றார்.

1 More update

Next Story