தேர்தலில் திமுகவுக்கு முதன்மை எதிர்க்கட்சி அதிமுகதான் - உதயநிதி ஸ்டாலின்


தேர்தலில் திமுகவுக்கு முதன்மை எதிர்க்கட்சி அதிமுகதான் - உதயநிதி ஸ்டாலின்
x
தினத்தந்தி 1 Jan 2026 3:48 PM IST (Updated: 1 Jan 2026 6:41 PM IST)
t-max-icont-min-icon

சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு இப்போது வரை வலுவான போட்டியாளர் என யாரும் எனக்கு தெரியவில்லை என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

அதிமுக தற்போது வவலுவிழந்து இருந்தாலும் அக்கட்சிதான் எங்கள் முதன்மை எதிர்க்கட்சியாக நாங்கள் பார்க்கிறோம் என துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நாங்கள் பாஜகவையும் அதன் அனைத்து பி டீம்களையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். தமிழகத்தில் மதசார்பற்ற சக்திகளை பலவீனப்படுத்த பாஜக அனைத்து வழிகளையும் பயன்படுத்தும் என்பதை அறிந்தே இருக்கிறோம். தமிழக மக்கள் பாஜகவின் சதியை அறிந்து அதை தோற்கடிப்பர். தேசிய ஜனநாயக கூட்டணியில் முடிவுகள் அனைத்தும் டெல்லியில் எடுக்கப்பட்டு தமிழக கட்சிகளின் மீது திணிக்கப்படுகிறது. நீண்ட காலமாக எங்கள் பிரதான போட்டியாளராக அதிமுக இருந்தாலும், இப்போதைய நிலையில் பலம் வாய்ந்த போட்டியாளர் யாரும் இருப்பதாக நான் கருதவில்லை. பலவீனமான நிலையில் அதிமுக இருந்தாலும், அதைத்தான் பிரதான எதிர்க்கட்சியாக நாங்கள் பார்க்கிறோம். அவர்கள் தான் எங்களது போட்டியாளர்.

இவ்வாறு அவர் கூறினார்

1 More update

Next Story