இன்னும் ஒரு மாதத்தில்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி


இன்னும் ஒரு மாதத்தில்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி
x

ஜெயலலிதாவின் ஆட்சி தமிழகத்தில் மலர வேண்டும் என்பது என்னுடைய முழு ஆசை என்று செங்கோட்டையன் கூறினார்.

கோவை,

செங்கோட்டையன் இன்று மாலை சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்தார். அப்போது அவரை நிருபர்கள் சூழ்ந்து கொண்டு எங்கே செல்கிறீர்கள் என்று கேட்டபோது, அதற்கு அவர், “நான் சென்னையில் உள்ள உறவினர் திருமண விழாவுக்கு செல்கிறேன் என்றார். பின்னர் நிருபர்கள், அவரிடம் அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க எடப்பாடி பழனிசாமிக்கு நீங்கள் கொடுத்த 10 நாட்கள் கெடுவில் இன்னும் 2 நாட்கள் தான் உள்ளதே... என்ற கேள்வியை எழுப்பினர். அதற்கு அவர் ‘எல்லாம் நன்மைக்கே’ என்றார்.

பின்னர் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் கட்சி ஆதரவாளர்கள் உங்களை சந்திக்கிறார்களே? என்ற கேள்விக்கு அவர், என்னைப் பொறுத்தவரை இயக்கம் நன்றாக இருக்க வேண்டும். எல்லோரும் இணைய வேண்டும். ஜெயலலிதாவின் ஆட்சி தமிழகத்தில் மலர வேண்டும் என்பது என்னுடைய முழு ஆசை. காலம் தான் பதில் சொல்லும். பிரிந்து சென்றவர்கள் அனைவரும், அ.தி.மு.க.வில் இன்னும் ஒரு மாதத்தில் இணைவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.

1 More update

Next Story