தவெக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை...? - பாமக எம்.எல்.ஏ. அருள் பதில்


தவெக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை...? - பாமக எம்.எல்.ஏ. அருள் பதில்
x

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது

சேலம்

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு, நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன

இந்நிலையில், சேலத்தில் இன்று சேலம் மேற்கு தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி எம்.எல்.ஏ. அருள் (ராமதாஸ் ஆதரவாளர்) தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது, தவெக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துகிறீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த எம்.எல்.ஏ. அருள் கூறுகையில்,

அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அவர்களுக்கு மக்கள் ஆதரவு வேண்டும். விஜய் உடன் இளைஞர்கள் தேனீயை போன்று சுற்றி சுழன்றுகொண்டிருக்கிறார்கள். மக்கள் வாக்களித்து விஜய் முதல்-அமைச்சர் ஆனால் யார் தடுக்க முடியும்.

அரசியலில் யாரையும் குறைத்து மதிப்பிடாதீர்கள். திமுக, அதிமுகவுக்கு மாற்றாக வேறு அணி வந்தால் என்ன தவறு. திமுக, அதிமுக தான் தமிழகத்தை ஆட்சி செய்ய வேண்டும் என்று எதாவது உள்ளதா?.

கூட்டணி தொடர்பாக அனைத்து கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். தவெகவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது’ என்றார்

1 More update

Next Story