அம்ரிதா எக்ஸ்பிரஸ் ரெயில் ராமேஸ்வரம் வரை நீட்டிப்பு

கோப்புப்படம்
அம்ரிதா எக்ஸ்பிரஸ் ரெயில் கூடுதலாக மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:-
திருவனந்தபுரம் சென்டிரல் - மதுரை இடையே இயக்கப்படும் அம்ரிதா எக்ஸ்பிரஸ் ரெயிலை (வண்டி எண்கள் 16343/16344) ராமேஸ்வரம் வரை நீட்டிப்பு செய்ய ரெயில்வே வாரியம் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி நாளை (வியாழக்கிழமை) முதல் திருவனந்தபுரம் சென்டிரலில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்படும் அம்ரிதா எக்ஸ்பிரஸ் ரெயில் மறுநாள் மதியம் 12.45 மணிக்கு ராமேஸ்வரத்தை சென்றடையும்.
மறுமார்க்கமாக 17-ந்தேதி முதல் ராமேஸ்வரத்தில் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் மறுநாள் காலை 4.55 மணிக்கு திருவனந்தபுரம் சென்டிரலை சென்றடையும். இந்த ரெயில் கூடுதலாக மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






