வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற ரஜினிகாந்துக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து

ரஜினிகாந்த் நல்ல உடல் நலத்துடன் திரையுலகில் மேலும் பல சாதனைகளை படைக்க வாழ்த்துவதாக அன்புமணி தெரிவித்துள்ளார்.
சென்னை,
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
கோவாவில் நடைபெற்ற 56-ஆம் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற நண்பர் ரஜினிகாந்துக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திரையுலக பங்களிப்புக்காக பத்ம பூஷன், பத்ம விபூஷன், தாதாசாகேப் பால்கே உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ள அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது இன்னொரு மணிமகுடம். நடிகர் ரஜினிகாந்த் நல்ல உடல் நலத்துடன் திரையுலகில் மேலும் பல சாதனைகளை படைக்க வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






