இளையராஜாவுக்கு பாராட்டு விழா; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு


தினத்தந்தி 13 Sept 2025 6:40 PM IST (Updated: 13 Sept 2025 6:45 PM IST)
t-max-icont-min-icon

இளையராஜாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவு பரிசு வழங்குகிறார்.

தமிழ் திரை இசையை உலக அளவில் புகழ்பெற செய்த இசைஞானி இளையராஜா, திரை இசை உலகில் 50 ஆண்டுகளை கடந்ததையொட்டி அவருக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடைபெற்று வருகிறது.

"சிம்பொனி – சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜா – பொன்விழா ஆண்டு 50" என்ற தலைப்பில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இந்த பாராட்டு விழா நடைபெற்று வருகிறது.

இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன் உள்பட திரைப்பிரபலங்கள் உள்பட பலர் பங்கேற்றுள்ளனர்.

50 ஆண்டுகளாக தமிழ் இசைத்துறையில் முக்கிய பங்களிப்பை வழங்கி, ஒட்டுமொத்த தமிழர் உலகமே கொண்டாடும் இசையமைப்பாளராக விளங்கும் இளையராஜாவுக்கு, தமிழக அரசு சார்பில் அளிக்கப்படும் இந்த கவுரவம் தமிழ் இசைத்துறை வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் இளையராஜாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவு பரிசு வழங்குகிறார்.

1 More update

Next Story