சட்டசபை தேர்தல்; விருப்ப மனுக்களை தைலாபுரம் அலுவலகத்தில் பெற்று கொள்ளலாம்: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்


சட்டசபை தேர்தல்; விருப்ப மனுக்களை தைலாபுரம் அலுவலகத்தில் பெற்று கொள்ளலாம்: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்
x

விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து கொடுத்தவுடன், பெற்று கொண்டதற்கான ரசீது உடனே வழங்கப்படும்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் மற்றும் தலைவரான டாக்டர் ராமதாஸ் வெளியிட்டு உள்ள அறிக்கையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெறவுள்ள 2026-ம் ஆண்டு சட்டசபை பொதுத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சட்டசபை வேட்பாளராக போட்டியிட விரும்புவோர் தங்களது விருப்ப மனுக்களை 09.01.2026 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் தைலாபுரம் தோட்டத்தில் வழங்கலாம்.

விருப்ப மனுக்கள் தைலாபுரம் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். மனுக்களை பூர்த்தி செய்து கொடுத்தவுடன், பெற்று கொண்டதற்கான ரசீது உடனே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

1 More update

Next Story