அரசு ஊழியர்களின் சொத்து விவரங்களை வெளியிட முடியாது- தமிழ்நாடு தகவல் ஆணையம்


அரசு ஊழியர்களின் சொத்து விவரங்களை வெளியிட முடியாது- தமிழ்நாடு தகவல் ஆணையம்
x

பொதுநலன் இல்லாமல் தனிப்பட்ட விவரங்களை வெளியிட முடியாது என்றும் தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது

சென்னை ,

அரசு ஊழியர்களின் சொத்துக்கள் மற்றும் கடன்கள் குறித்த விவரங்களை வெளியிட முடியாது என்று தமிழ்நாடு தகவல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பொதுநலன் இல்லாமல் தனிப்பட்ட விவரங்களை வெளியிட முடியாது என்றும் தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கிருஷ்ணகிரியில் நீர்த்தேக்க திட்ட உதவி பொறியாளராக பணியாற்றிய காளிப்பிரியனின் சொத்து, கடன், வருமான வரி விவரங்களை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சீனிவாசன் என்பவர் கோரி இருந்தார்.

மனுவை விசாரித்த மாநில தகவல் ஆணையர் ஆர்.பிரியக்குமார், விண்ணப்பத்தை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.



1 More update

Next Story