சிறுமியிடம் சில்மிஷ முயற்சி: வாலிபருக்கு 6 ஆண்டுகள் சிறை - போக்சோ கோர்ட்டு தீர்ப்பு


சிறுமியிடம் சில்மிஷ முயற்சி: வாலிபருக்கு 6 ஆண்டுகள் சிறை - போக்சோ கோர்ட்டு தீர்ப்பு
x

கோப்புப்படம் 

சிறுமியிடம் சில்மிஷ முயற்சியில் ஈடுபட முயன்ற வாலிபருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் போக்சோ கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சேலம்

சேலம் தாரமங்கலம் அருகே உள்ள தொளசம்பட்டி லட்சுமிகாடு பகுதியை சேர்ந்தவர் பத்மநாபன். இவருடைய மகன் முகேஷ் (22 வயது). 9-ம் வகுப்பு வரை படித்துள்ள இவர் தற்போது தனியார் பேருந்தில் நடத்துநராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 26-ந்தேதி தெருவில் விளையாடிக்கொண்டிருந்த 7 வயது சிறுமியை ஒரு புதர் மறைவுக்கு அழைத்து சென்றார். பின்னர் அந்த சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட முயன்றார். அப்போது சிறுமி சத்தம் போட்டு உள்ளார்.

இதையடுத்து அந்த வழியாக சென்ற சிலர் சிறுமியை மீட்டனர். பின்னர் வாலிபரை பிடித்து ஓமலூர் அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து முகேசை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு சேலம் போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதையடுத்து குற்றம் சாட்டப்பட்ட முகேசுக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி (பொறுப்பு) தீபா உத்தரவிட்டு உள்ளார்.

1 More update

Next Story