தரையில் பச்சிளங் குழந்தைகள்..திமுக அரசு வெட்கப்பட வேண்டும்- நயினார் நாகேந்திரன்


தரையில் பச்சிளங் குழந்தைகள்..திமுக அரசு வெட்கப்பட வேண்டும்- நயினார் நாகேந்திரன்
x

குழந்தைகளைத் தரையில் படுக்க வைத்திருக்கும் காணொளி மிகுந்த கவலையளிக்கிறது என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

கள்ளக்குறிச்சி அரசு மகப்பேறு மருத்துவமனையில் தொட்டில் இல்லாததால் பச்சிளம் குழந்தைகளைத் தரையில் படுக்க வைத்திருக்கும் அவலத்தை சுட்டிக் காட்டும் காணொளி மிகுந்த கவலையளிக்கிறது.

பச்சிளம் குழந்தைகளைப் படுக்கவைக்கக்கூட வசதியில்லாத இந்த மருத்துவக் கட்டமைப்பு தான் உலகம் போற்றும் சிறந்த மருத்துவக் கட்டமைப்பா? முறையான வசதிகள் ஏற்படுத்தித் தருவதை விட்டுவிட்டு விளம்பரத்தில் மட்டும் கவனம் செலுத்துவதற்கு திமுக அரசு அரசு வெட்கப்பட வேண்டும். என தெரிவித்துள்ளார் .

1 More update

Next Story