விஜய் ஆர்ப்பாட்டத்தில் தடுப்புகள் சேதம்: தவெக எடுத்த முடிவு

பொது சொத்துக்களை சேதப்படுத்தியதாக தவெகவினரை பலர் விமர்சித்தனர்.
சென்னை,
லாக்கப் மரணங்களை கண்டித்து சென்னை சிவானந்தா சாலையில் தவெக தலைவர் விஜய் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தொண்டர்கள் முண்டியடித்ததால் சாலை தடுப்பு கம்பிகள் சேதமடைந்தன. இதன் வீடியோவை பகிர்ந்து பொது சொத்துக்களை சேதப்படுத்தியதாக தவெகவினரை பலர் விமர்சித்தனர்.
இந்த நிலையில், தவெக ஆர்ப்பாட்டத்தின்போது. சேதமடைந்த சாலை தடுப்பு கம்பிகளை சரி செய்து தர அனுமதி தருமாறு சென்னை மாநகராட்சி நிர்வாகத்திடம் அக்கட்சி சார்பில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. தவெக சென்னை தெற்கு வடக்கு மாவட்ட தலைவர் அப்பு மாநகராட்சி உதவி பொறியாளருக்கு விண்ணப்பம் அளித்துள்ளார்.
Related Tags :
Next Story






