சென்னையில் நடைபாதையில் பைக் மோதி விபத்து: வாலிபர் பலி, நண்பர் படுகாயம்

பெங்களூரில் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரியும் கல்லூரி நண்பர் ஒருவர் மடிப்பாக்கம் வந்திருந்தார்.
சோழிங்கநல்லூர்,
அச்சிறுப்பாக்கத்தை சேர்ந்தவர் வசந்தகுமார் (வயது25). என்ஜினீயரிங் பட்டதாரி யான இவர் தற்போது போரூரில் தங்கி தனியார் பயிற்சி மையத்தில் சப் இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு படித்து வந்தார். அச்சிறுப் பாக்கத்தை சேர்ந்த இவரது நண்பர் அமீருதீன்(25) என்பவர் திருவான்மியூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் பெங்களூரில் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரியும் இவர்களது கல்லூரி நண்பர் ஒருவர் மடிப்பாக்கம் வந்திருந்தார். இதையடுத்து அவரை பார்ப்பதற்காக வசந்தகுமார் மற்றும் அம்ரூதீன் ஆகிய இருவரும் வந்தனர்.பின்னர் இன்று அதிகாலை வசந்த குமாரும், அமீருதீனும் மோட்டார்சைக் கிளில் கிழக்கு கடற்கரையோர சாலை பகுதியில் ஜாலியாக சுற்றினர். காலை காலை 5 மணி அளவில் ராஜீவ் காந்தி சாலை வழியாக மத்திய கைலாஷ் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை அமீருதீன் ஓட்டினார்.
தரமணி தர்மாம்பாள் பெண்கள் அரசு பாலி டெக்னிக் அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தாறுமாறாக ஓடி சாலையோர நடைபாதையில் மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசபட்டனர்.தலையில் பலத்த காயம் அடைந்த வசந்தகுமார் சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயம் அடைந்த அமீருதீனுக்கு மயக்க நிலையில் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.