பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் டெல்லி பயணம்


பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் டெல்லி பயணம்
x

எடப்பாடி பழனிசாமியை, பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று சந்தித்து பேசினார்.

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், தேமுதிக , விசிக, மதிமுக, பாமக, தவெக உள்பட பல்வேறு கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தொடங்கி விட்டன. சட்டசபை தேர்தலில் அதிமுக, பாஜக இடையே கூட்டணி அமைந்துள்ளது.

இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழக மேலிட பார்வையாளர் அரவிந்த் மேனன், மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் ஆகியோர் சந்தித்து பேசினர். சுமார் அரை மணி நேரம் அரசியல் நிலவரம் குறித்தும், சட்டசபை தேர்தல் வியூகம், கூட்டணியில் யார் யாரை சேர்ப்பது? என்பது தொடர்பாகவும் எடப்பாடி பழனிசாமியுடன் பேசியதாக கூறப்படுகிறது.

அதன்பிறகு எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன் ஆகியோர் மட்டும் சுமார் அரை மணி நேரம் தனியாக பேசினர். அப்போது, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகிய இருவரையும் கூட்டணியில் சேர்ப்பது தொடர்பாக எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் ஆலோசனை நடத்தியதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். அக்டோபரில் தொடங்க உள்ள தனது தேர்தல் சுற்றுப் பயணம் தொடர்பாக அமித்ஷா, ஜே.பி.நட்டா ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்த இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அதிமுக ஒருங்கிணைப்பு குறித்தும் ஆலோசனை நடத்த உள்ளதாக சொல்லப்படுகிறது. நேற்று எடப்பாடி பழனிசாமியுடன் பேசியது குறித்து பாஜக தலைமையிடம் நயினார் நாகேந்திரன் தெரிவிப்பார் என்று கூறப்படுகிறது.

1 More update

Next Story