மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நயினார் நாகேந்திரன் சாமி தரிசனம்

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், தேமுதிக , விசிக, மதிமுக, பாமக, தவெக உள்பட பல்வேறு கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன.
அந்த வகையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தேர்தல் பிரசார பயணத்தை இன்று தொடங்க உள்ளார். ‘தமிழகம் தலைநிமிர’ என்ற பெயரில் மதுரையில் இருந்து நயினார் நாகேந்திரன் தனது தேர்தல் பிரசார பயணத்தை தொடங்குகிறார். பிரசார தொடக்க விழா மதுரை அண்ணாநகர் அம்பிகா தியேட்டர் சந்திப்பு பகுதியில் இன்று மாலையில் நடைபெறுகிறது. மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், பாஜக நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் இதில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரசார பயணம் இன்று தொடங்க உள்ள நிலையில் நயினார் நாகேந்திரன் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அவருடன் பாஜக நிர்வாகிகளும் சாமி தரிசனம் செய்தனர்.






