பா.ஜனதா-ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் சதி செய்வதில் வல்லவர்கள்: சபாநாயகர் அப்பாவு பேட்டி

41 பேர் இறந்து கிடக்கிறார்கள். அவர்களை அப்படியே போட்டுவிட்டு ஓடி வந்தவர்களிடம் போய் செங்கோட்டையன் சேர்ந்துள்ளார் என்று அப்பாவு விமர்சித்தார்.
பா.ஜனதா-ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் சதி செய்வதில் வல்லவர்கள்: சபாநாயகர் அப்பாவு பேட்டி
Published on

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் தமிழக சபாநாயகர் அப்பாவு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தேர்தலுக்கு முன்பாக சட்டமன்றம் கூட வாய்ப்பு உள்ளது. செங்கோட்டையன், மனோஜ் பாண்டியன் ஆகியோரது ராஜினாமாக்கள் ஏற்கப்பட்டுள்ளது. அவர்கள் தற்போது எம்.எல்.ஏ.க்களாக இல்லை. இலங்கை விமான நிலையத்தில் தத்தளித்து வரும் தமிழர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுகிறார். த.வெ.க. பற்றி மக்கள் முடிவு செய்வார்கள். கரூரில் 41 பேர் இறந்துவிட்டார்கள் என்றதும் அப்படியே ஓடி விட்டார்கள். முதலமைச்சர் உடனடியாக நேரில் சென்று அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்தார்.

இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் அரசு சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டது. மனித நேயம், மக்களுடன் யார் இருக்கிறார்? கஷ்டம் வரும்போது யார் துணை நிற்கிறார்கள்? என்பதை மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெறும். மீண்டும் முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் அரியணையில் அமர்வார். அ.தி.மு.க.வினர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வது அவர்களது சொந்த விருப்பமாகும்.

செங்கோட்டையன், அமித் ஷாவை 2 முறை சந்தித்தார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சென்று பார்த்தார். அமித் ஷா சொல்லிதான் செங்கோட்டையன் செயல்படுவதாக பத்திரிகைகளில் செய்தி வந்தது. அவர் கண்ணியத்துக்குரிய சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். அவர் சேர்ந்ததே பத்திரிகைகள் ஸ்லீப்பர் செல் என்று கூறுகிறீர்கள். பாரதிய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். சதி செய்வதில் வல்லவர்கள். எப்போது என்ன செய்வார்கள் என்று தெரியாது. எதற்காக இதனை செய்வார்கள் என்றும் எங்களுக்கு தெரியாது. செங்கோட்டையன் நல்ல சட்டமன்ற உறுப்பினர், நான் மதிக்கின்றவர். 41 பேர் இறந்து கிடக்கிறார்கள். அவர்களை அப்படியே போட்டுவிட்டு ஓடி வந்தவர்களிடம் போய் செங்கோட்டையன் சேர்ந்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com