நீலகிரி வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்


நீலகிரி வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்
x

சந்தேகத்திற்குரிய பொருட்கள் எதுவும் கிடைக்காததால் வெடிகுண்டு மிரட்டல் போலியானது என்பதை போலீசார் உறுதி செய்தனர்.

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள ராஜ்பவன் மற்றும் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி ஆகிய இரண்டு இடங்களுக்கு இன்று மர்ம நபர்கள் மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து உதகை எஸ்.பி. அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் 2 குழுக்களாக பிரிந்து ராஜ்பவன் மற்றும் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு சென்றனர். பின்னர் மோப்ப நாய்களின் உதவியோடு தீவிர சோதனை நடத்தினர். நீண்ட நேர சோதனைக்கு பிறகு, சந்தேகத்திற்குரிய பொருட்கள் எதுவும் கிடைக்காததால் வெடிகுண்டு மிரட்டல் போலியானது என்பதை போலீசார் உறுதி செய்தனர். இந்நிலையில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்கள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story