தூத்துக்குடியில் வீட்டில் வெடிகுண்டு வீச்சு: போலீஸ் விசாரணை


தூத்துக்குடியில் வீட்டில் வெடிகுண்டு வீச்சு: போலீஸ் விசாரணை
x

தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி, அண்ணாநகர், 4வது தெருவைச் சேர்ந்த மாடசாமி (வயது 38), கூலித் தொழிலாளி. இவரது வீட்டில் நள்ளிரவில் மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசியுள்ளனர். பலத்த சத்தம் கேட்டு அதிர்ச்சியில் எழுந்த மாடசாமி மற்றும் குடும்பத்தினர் வெளியே வந்து பார்த்த போது, மர்ம நபர்கள் தப்பியோடி விட்டனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வீட்டுக்குள் வீசியது வெடி குண்டு பட்டாசா? அல்லது நாட்டு வெடிகுண்டா? என்பதும் குறித்தும் சோதனை நடந்தது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

1 More update

Next Story