சாலைகளில் பூசணிக்காய் உடைப்பது வாகன ஒட்டிகளுக்கு ஆபத்தானது - சென்னை மாநகர காவல்துறை


சாலைகளில் பூசணிக்காய் உடைப்பது வாகன ஒட்டிகளுக்கு ஆபத்தானது - சென்னை மாநகர காவல்துறை
x

சாலை பாதுகாப்புக்காக, சாலையில் பூசணிக்காய் உடைக்க வேண்டாம் என்று சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

சென்னை,

ஆண்டுதோறும் ஆயுத பூஜையன்று தொழில் நிறுவனங்களில் எந்திரங்களுக்கு பூஜை செய்து வழிபாடு நடத்துவது வழக்கம். பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும் பூஜை செய்வார்கள். அதன்படி இந்த ஆண்டுக்கான ஆயுதபூஜை இன்று (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் சாலை பாதுகாப்புக்காக, சாலையில் பூசணிக்காய் உடைக்க வேண்டாம் என்று சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை மாநகர காவல்துறை தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

ஆயுத பூஜையில் திருஷ்டி கழிக்க பூசணிக்காய்களை உடைக்கும் பழக்கம் உள்ளது.

சாலையில் உடைப்பது வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தானது.

சாலை பாதுகாப்புக்காக, சாலையில் பூசணிக்காய் உடைக்க வேண்டாம்.

அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

சாலை பாதுகாப்பை உறுதி செய்வோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story