திருவாரூர்: சாலை தடுப்புச்சுவரில் மோதி தீப்பற்றி எரிந்த கார் - டிரைவர் பலி

உயிரிழந்த கார் டிரைவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பைபாஸ் சாலையில் நேற்று இரவு அதிவேகமாக கார் சென்றுகொண்டிருந்தது. அப்போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை தடுப்புச்சுவரில் மோதியது.
இந்த கோர விபத்தில் கார் தீப்பற்றி எரிந்தது. இதில், காரை ஓட்டிய டிரைவர் சிக்கிக்கொண்டார். அவர் தீ விபத்தில் காருக்குள் சிக்கி உடல் கருகி உயிரிழந்தார்.
தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். மேலும், தீயில் கருகி உயிரிழந்த கார் டிரைவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்த கார் டிரைவர் யார்? விபத்து எவ்வாறு ஏற்பட்டது? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story






