பாம்பன் பாலத்தில் கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து - தம்பதி மருத்துவமனையில் அனுமதி

சாலையில் கவிழ்ந்து கிடந்த காரை பொதுமக்கள் உதவியுடன் போலீசார் அப்புறப்படுத்தினர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியை சேர்ந்த தம்பதியினர், தங்கள் காரில் ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அந்த கார் பாம்பன் சாலைப்பாலம் மீது சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் காரில் பயணித்த தம்பதிக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன. அவர்களை அக்கம்பக்கத்தினர் உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சாலையில் கவிழ்ந்து கிடந்த காரை பொதுமக்கள் உதவியுடன் போலீசார் அப்புறப்படுத்தினர். தற்போது மழை பெய்து வரும் சூழலில், பாம்பன் சாலை பாலம் வழியாக செல்பவர்கள் அதிவேகமாக வாகனத்தை இயக்க வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
Related Tags :
Next Story






