காதலிக்குமாறு கல்லூரி மாணவியை மிரட்டிய மாணவர் மீது வழக்கு


காதலிக்குமாறு கல்லூரி மாணவியை மிரட்டிய மாணவர் மீது வழக்கு
x

தன்னை காதலிக்குமாறு மாணவியின் கழுத்தை பிடித்து மாணவர் மிரட்டியதாக கூறப்படுகிறது.

நெல்லை,

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 19 வயது மாணவி தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். அதே கல்லூரியில் படிக்கும் 19 வயது மாணவர், அந்த மாணவியை காதலிப்பதாக கூறி பிரச்சினை செய்து வந்தார். இதுகுறித்து மாணவி கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்திருந்தார். ஆனால் அதனை பொருட்படுத்தாத மாணவர் நேற்று முன்தினம் அந்த மாணவியின் வீட்டுக்கே சென்று தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். மாணவி மீண்டும் மறுத்துவிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த மாணவர் உடனே மாணவியின் கழுத்தை பிடித்து மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவி அளித்த புகாரின்பேரில், மாணவர் மீது திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் சீதாலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

1 More update

Next Story