தமிழகத்தில் சாதிய ரீதியிலான வன்கொடுமைகள் தங்கு தடையின்றி நடக்கின்றன - பா. ரஞ்சித் ஆவேசம்


தமிழகத்தில் சாதிய ரீதியிலான வன்கொடுமைகள் தங்கு தடையின்றி நடக்கின்றன - பா. ரஞ்சித் ஆவேசம்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 15 Feb 2025 5:17 AM (Updated: 15 Feb 2025 6:07 PM)
t-max-icont-min-icon

தமிழகத்தில் சாதியரீதியிலான வன்கொடுமைகள் தங்கு தடையின்றி நடக்கின்றன என பா. ரஞ்சித் கூறியுள்ளார்.

சென்னை,

இயக்குனர் பா.ரஞ்சித் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

தமிழ்நாட்டில் மிகக் கொடுமையான சாதியரீதியிலான வன்கொடுமைகள் தங்கு தடையின்றி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த சில தினங்களில் மட்டும் பல வன்முறை சம்பவங்கள் தலித் மக்களின் மீது நிகழ்த்தப் பட்டிருக்கிறது.

இதை தடுக்க அல்லது குறைந்தப்பட்சம் இப்படி நடந்துகொண்டு இருக்கிறது என்பதையாவது ஒப்புகொள்வீரா? முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே.

தங்கள் அமைச்சரவையின் கீழ் இயங்கும், ஆதி திராவிட துறைகளுக்கும், தனித்தொகுதி எம்.எல்.ஏ., எம்.பி. அவர்களுக்கும் இதை விட வேறு முக்கியமான பணிகள் இருப்பதால் நாங்கள் வேண்டுமானால், சமீப காலங்களில் தலித்துகள் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கிறோம். நன்றி. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



1 More update

Next Story