ஆபரேஷன் சிந்தூரை விளம்பர வெறிக்காக பயன்படுத்தி வரும் மத்திய அரசு: சு.வெங்கடேசன் எம்.பி.

நாங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு இன்று வரை பா.ஜ.க.வால் பதிலளிக்க முடியவில்லை என சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்
ஆபரேஷன் சிந்தூரை விளம்பர வெறிக்காக பயன்படுத்தி வரும் மத்திய அரசு: சு.வெங்கடேசன் எம்.பி.
Published on

மதுரை எம்.பி.யான சு.வெங்கடேசன் தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது,

பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடரை கூட்டச் சொன்னோம். அரசு அதனை செய்யவில்லை. வழக்கம்போல் கூடுகிற மழைக்கால கூட்டத்தொடரிலும் விவாதப் பொருளில் அது சேர்க்கப்படவில்லை. எதிர்க்கட்சிகளின் தீவிரமான போராட்டத்திற்கு பின்பே "பஹல்காம் தீவிரவாத தாக்குதல்-ஆபரேஷன் சிந்தூர்" குறித்து விவாதம் நடத்த அரசு ஏற்றுக்கொண்டது.அந்த விவாதத்தில் கூட ஆபரேஷன் சிந்தூர் பற்றி மட்டுமே அமைச்சர்கள் பேசினார்கள். பஹல்காம் தாக்குதல், அதில் உயிரிழந்தவர்கள், பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்ட எல்லையோர மக்கள் குறித்து பா.ஜ.க. அரசு ஒரு வார்த்தை பேசவில்லை.இந்திய ராணுவத்தை எப்படிப் பயன்படுத்தியிருக்க வேண்டுமோ அப்படிப் பயன்படுத்தவில்லை என்று நாங்கள் குற்றம்சாட்டினோம். தாக்குதலை முடிவுக்கு கொண்டு வருவதாக அமெரிக்க அதிபர் அறிவித்ததைப் பற்றி கேள்வி எழுப்பினோம். ஆனால் அது பற்றி எந்த பதிலும் சொல்லவில்லை.பாகிஸ்தானுக்குள் 100 கிலோமீட்டர் நுழைந்து தாக்குதல் தொடுக்கப்பட்டதாக சொன்னது அரசு.

அது சார்ந்த அரசியல் கேள்விகளுக்கு பதில் சொல்ல பிரதமரால் மாநிலங்களவைக்கு வந்து சேர முடியவில்லை.தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூரைத் தனது விளம்பர வெறிக்காக மட்டுமே பயன்படுத்தி வரும் அரசு, இன்று மேலும் ஒரு படி கீழிறங்கி மூத்த ராணுவ அதிகாரிகளை பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் கொண்டு வந்து அமர்த்தியுள்ளது.எப்படித் தாக்குதல் நடந்தது? தீவிரவாதிகளுக்கு உதவியவர்கள் யார்? எத்தனை பேரைக் கைது செய்தீர்கள்? பாதுகாப்புக் குறைபாடுகளுக்கு யார் பொறுப்பு? என நாங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு இன்று வரை பா.ஜ.க.வால் பதிலளிக்க முடியவில்லை என பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com