பெங்களூரு-சென்னை சென்டிரல் இடையிலான எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்


பெங்களூரு-சென்னை சென்டிரல் இடையிலான எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்
x

கோப்புப்படம்

பெங்களூரு-சென்னை சென்டிரல் இடையிலான எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பராமரிப்பு பணி காரணமாக பெங்களூரு-சென்னை சென்டிரல் இடையிலான எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, கே.எஸ்.ஆர். பெங்களூருவில் இருந்து சென்னை சென்டிரல் வரும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-12658) வருகிற 30-ந்தேதி, யஸ்வந்த்பூர், லோட்டகோல்லஹள்ளி, எஸ்.எம்.வி.டி.பெங்களூரு, பய்யப்பனஹள்ளி வழியாக இயக்கப்படும். மேலும், இந்த ரெயில் பெங்களூரு கண்டோன்மென்ட் ரெயில் நிலையத்தில் நிற்காது.

அதே தேதியில், கர்நாடக மாநிலம் அசோகபுரத்தில் இருந்து சென்னை சென்டிரலுக்கு வரும் காவேரி எக்ஸ்பிரஸ் ரெயில் (16022) கே.எஸ்.ஆர்.பெங்களூரு, யஸ்வந்த்பூர், லோட்டகோல்லஹள்ளி, பய்யப்பனஹள்ளி வழியாக இயக்கப்படும். மேலும் இந்த ரெயிலும் பெங்களூரு கண்டோன்மென்ட் ரெயில் நிலையத்தில் நிற்காது.

மைசூருவில் இருந்து காரைக்குடிக்கு வரும் சிறப்பு ரெயில் (06243) வருகிற 30-ந்தேதி கே.எஸ்.ஆர். பெங்களூரு, யஸ்வந்த்பூர், பய்யப்பனஹள்ளி வழியாக இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story