ஈரோடு - செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம்


ஈரோடு - செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம்
x

ரெயில் பாதை பராமரிப்பு காரணமாக ஈரோடு - செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நெல்லை,

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சாலைக்கும் சமயநல்லூருக்கும் இடையே தண்டவாளம் புதுப்பித்தல் பணி காரணமாக ரெயில் பாதை, மின் தடை காரணமாக ரெயில் சேவைகளில் தென்னக ரெயில்வே சார்பில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி (ரெயில் எண். 16845) ஈரோடு - செங்கோட்டை எக்ஸ்பிரஸ் பயணம் இன்று முதல் 30-ந்தேதி வரை திண்டுக்கல் மற்றும் செங்கோட்டை இடையே பகுதியளவு ரத்து செய்யப்படுகிறது.(ரெயில் எண்.16846) செங்கோட்டை- ஈரோடு எக்ஸ்பிரஸ் நாளை முதல் 31-ந்தேதி வரை செங்கோட்டை மற்றும் திண்டுக்கல் இடையே பகுதியளவு ரத்து செய்யப்படுகிறது.

திண்டுக்கல் மற்றும் ஈரோடு இடையே ரெயில் எண்.16845/16846 ஈரோடு - செங்கோட்டை - ஈரோடு எக்ஸ்பிரஸ் பகுதி நேரம் ரத்து செய்யப்பட்டதால் முன்பதிவு செய்யப்படாத சிறப்பு (ரெயில் எண். 06845/06846) மதுரை - செங்கோட்டை - மதுரை சிறப்பு ரெயில் மற்றும் (ரெயில் எண். 16845/16846) ஈரோடு - செங்கோட்டை - ஈரோடு எக்ஸ்பிரஸின் திட்டமிடப்பட்ட நேரங்கள் மற்றும் நிறுத்தங்களின்படி இயங்கும். (ரெயில் எண். 06846) செங்கோட்டை - மதுரை முன்பதிவு செய்யப்படாத சிறப்பு ரெயில் நாளை முதல் 31-ந் தேதி வரை செங்கோட்டையில் இருந்து காலை 5.10 மணிக்கு புறப்பட்டு அதே நாளில் காலை 9.30 மணிக்கு மதுரையை வந்தடையும்.

மதுரை - செங்கோட்டை முன்பதிவு செய்யப்படாத சிறப்பு ரெயில் (06845) மதுரையில் இருந்து இன்று முதல் 30-ந்தேதி வரை மாலை 6 மணிக்குப் புறப்பட்டு, அதே நாளில் இரவு 10.30 மணிக்கு செங்கோட்டையை வந்தடையும் என்று ரெயில்வே நிர்வாகம் தரப்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

1 More update

Next Story