திருச்சி-பாலக்காடு ரெயில் சேவைகளில் மாற்றம்

என்ஜினீயரிங் பணி நடைபெறுவதால் ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
திருச்சி,
திருச்சி ரெயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
சேலம் கோட்டத்தில் பல்வேறு பிரிவுகளில் என்ஜினீயரிங் பணி நடைபெறுவதால் ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படிம் வண்டி எண்: 16844 பாலக்காடு டவுன்-திருச்சி எக்ஸ்பிரஸ் நாளை (வியாழக்கிழமை) மற்றும் 26, 29 ஆகிய தேதிகளில் பாலக்காட்டில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டு கரூர் வரை மட்டும் இயக்கப்படும்.
வண்டி எண்: 16811 மயிலாடுதுறை-சேலம் மெமு எக்ஸபிரஸ் நாளை (வியாழக்கிழமை) மற்றும் 26, 29-ந் தேதிகளில் காலை 6 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து புறப்பட்டு கரூர் மாயனூர் வரை மட்டும் இயக்கப்படும். வண்டிஎண்: 16843 திருச்சி-பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் வருகிற 25-ந் தேதி திருச்சி ஜங்ஷனில் இருந்து பகல் 1 மணிக்கு புறப்பட்டு திருப்பூர் வரை மட்டும் இயக்கப்படும்.
வண்டி எண்: 16812 சேலம்-மயிலாடுதுறை மெமு எக்ஸ்பிரஸ் வழக்கமாக சேலத்தில் இருந்து பகல் 2.05 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் நாளை (வியாழக்கிழமை) மற்றும் 26, 29-ந் தேதிகளில் சேலம்-கரூர் இடையே ஒரு பகுதி மட்டும் ரத்து செய்யப்படுகிறது. அதற்கு பதிலாக, கரூரில் இருந்து பகல் 3.40 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறைக்கு செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.