சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாநகராட்சி சார்பில் உணவு விநியோகம்

சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாநகராட்சி சார்பில் உணவு விநியோகம்
Published on

சென்னை,

'டிட்வா' புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் இடைவிடாது பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். மேலும் பல்வேறு இடங்களில் வீட்டுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

இந்த நிலையில் சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாநகராட்சி சார்பில் உணவு விநியோகம் செய்யப்பட்டது. அதன்படி மாநகராட்சி சார்பில் இன்று காலை மட்டும் 2,74,200 பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com