லாரி மீது ஆம்னி பஸ் மோதி விபத்து - 10 பேர் காயம்

இந்த விபத்தில் எதிர்பாராதவிதமாக 10 பேர் படுகாயமடைந்தனர்.
கள்ளக்குறிச்சி,
சென்னையில் இருந்து பொள்ளாச்சி நோக்கிச் சென்ற ஆம்னி பஸ் ஒன்று உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் விருதாச்சலம் சாலை மேம்பாலம் அருகே சென்றுகொண்டிருந்தது. அப்போது அதே சாலையில் முன்னால் லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது.
இந்த நிலையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் முன்னால் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் எதிர்பாராதவிதமாக 10 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்து காரணமாக பாலத்தின் மேல் வாகனப்போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டதால் சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் மெதுவாக வாகனங்கள் ஊர்ந்து சென்றன். இதனால் சிறிது போக்குவரத்து நெறிசல் ஏற்பட்டது.
Related Tags :
Next Story






