சென்னை: அரசு சேவை இல்லத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை - அதிர்ச்சி சம்பவம்

அரசு சேவை இல்லத்தில் தங்கி 8ம் வகுப்பு மாணவி கல்வி பயின்று வருகிறார்
சென்னை
தமிழக அரசின் சமூக நலத்துறையின் கீழ் பல்வேறு மாவட்டங்களில் அரசு சேவை இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தங்கி மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை தாம்பரத்தில் அரசு சேவை இல்லத்தில் தங்கி 8ம் வகுப்பு மாணவி கல்வி பயின்று வருகிறார். இந்த மாணவி நேற்று இரவு தூக்கிக்கொண்டிருந்தபோது அங்கு பணியாற்றி வந்த காவலாளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் விரைந்து வந்து, மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலாளியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story






