திருச்சியில் இன்று டிரோன்கள் பறக்க தடை


திருச்சியில் இன்று டிரோன்கள் பறக்க தடை
x
தினத்தந்தி 2 Jan 2026 6:22 AM IST (Updated: 2 Jan 2026 6:29 AM IST)
t-max-icont-min-icon

முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை விமானம் மூலம் திருச்சிக்கு வருகிறார்.

திருச்சி,

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ திருச்சியில் இருந்து மதுரை வரை இன்று முதல் 12-ந் தேதி வரை சமத்துவ நடைபயணம் செல்கிறார். இந்த நடைபயணத்தை தி.மு.க. தலைவரும், தமிழக முதல் -அமைச்சருமான மு.க. ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி அளவில் திருச்சி தென்னூர் அண்ணாநகர் உழவர் சந்தை அருகில் தொடங்கி வைத்து பேசுகிறார்.

இதில் பங்கேற்பதற்காக முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று விமானம் மூலம் திருச்சிக்கு வருகிறார். இதனை முன்னிட்டு பாதுகாப்பு காரணம் கருதி இன்று டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

1 More update

Next Story