சென்னை அடையாறு முகத்துவாரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னை அடையாறு முகத்துவாரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
சென்னை,
வடகிழக்கு பருவமழை, கடந்த 16-ந் தேதி தமிழகத்தில் தொடங்கியது. சற்று தாமதமாக தொடங்கினாலும், அதன் வேகம் மிக தீவிரமாக இருக்கிறது. ஏற்கனவே வடகிழக்கு பருவமழை அதிக அளவில் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்ததால் அதற்கேற்ற வகையில் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில், சென்னை, சீனிவாசபுரம் அருகில் அடையாறு ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் நடைபெற்றுவரும் தூர்வாரும் பணிகளை முதல்-அமைச்சர்மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார். அப்போது முகத்துவாரத்தை அகலப்படுத்தும் பணியினை விரைந்து முடித்திடுமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், சட்டமன்ற உறுப்பினர் மரு.நா.எழிலன், தெற்கு வட்டார துணை ஆணையாளர் அதாப் ரசூல், நீர்வளத்துறை செயற்பொறியாளர் அருண்மொழி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.






