வேலூரில் கருணாநிதி சிலையை திறந்து வைத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். வேலூர் அரசு பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை அவர் இன்று திறந்து வைத்தார்.
இந்நிலையில், வேலூரின் கெங்கநல்லூரில் தி.மு.க. சார்பில் கட்டப்பட்ட கலைஞர் அறிவாலயத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். மேலும், அங்கு 700 கிலோ வெண்கலத்தால் நிறுவப்பட்டுள்ள கருணாநிதியின் சிலையையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சிலை திறப்பை தொடர்ந்து 30 அடி உயர கொடிக்கம்பத்தில் தி.மு.க. கொடியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்தார்.
இதனை தொடர்ந்து நடந்த நிகழ்சியில் சிலம்பாட்டத்தில் கின்னஸ் சாதனை படைத்த 2 மாணவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார். மேலும், பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகள் 9 பேருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார்.






