குழந்தைகள் தினம்: த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து

மழலைச் சிரிப்பினில், மனக்காயம் ஆற்றுபவர்கள் குழந்தைகள் என விஜய் தெரிவித்துள்ளார்.
குழந்தைகள் தினம்: த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து
Published on

சென்னை,

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய், 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

"வண்ணத்துப் பூச்சிகளாய்ப் பறப்பவர்கள்! வெள்ளைச் சிரிப்பினில் நம் உள்ளம் நெகிழ வைப்பவர்கள்! மழலைச் சிரிப்பினில், மனக்காயம் ஆற்றுபவர்கள் குழந்தைகள்!

விலை மதிப்பில்லாத நம் செல்வங்களின் உரிமைகளை என்றும் காத்திடுவோம், அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்போம்.

கள்ளம் கபடமற்ற நம் மழலைச் செல்வங்களின் கனவுகள் யாவும் நனவாக, எல்லையில்லாக் கற்பனை வானில் சிறகடித்துப் பறக்க, உங்கள் வண்ணப் புன்னகை என்றும் தொடர வாழ்த்துகிறேன்."

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com