கோவை-தன்பாத் வாராந்திர சிறப்பு ரெயில் ரத்து

பொறியியல் பணிகள் காரணமாக கோவை-தன்பாத் வாராந்திர சிறப்பு ரெயில் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை,
சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
“தெலுங்கானா மாநிலம் செகந்தராபாத்தில் ரெயில் பாதையில் மேற்கொள்ளப்படும் பொறியியல் பணிகள் காரணமாக இன்று (சனிக்கிழமை) மாலை 4.10 மணிக்கு ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து புறப்பட்டு, கோவைக்கு 13-ந் தேதி மாலை 6.30 மணிக்கு வந்தடையும் தன்பாத்- கோவை வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்:- 03679) ரத்து செய்யப்படுகிறது.
இதேபோல் வருகிற 14-ந் தேதி காலை 7.50 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் கோவை-தன்பாத் வாராந்திர சிறப்பு ரெயில் (எண்: 03680) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






