கோவை-ஜெய்ப்பூர் சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

கோப்புப்படம்
கோவை-ஜெய்ப்பூர் இடையிலான சிறப்பு ரெயில் சேவை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
கோவையில் இருந்து வியாழக்கிழமைகளில் அதிகாலை 2.30 மணிக்கு புறப்பட்டு 3-வது நாள் மதியம் 1.25 மணிக்கு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் செல்லும் சிறப்பு ரெயில் சேவை (வண்டி எண். 06181), வருகிற அக்டோபர் 16, 23, 30 நவம்பர் 6 ஆகிய தேதிகள் வரை (வியாழக்கிழமை) நீட்டிக்கப்பட்டுள்ளது.
மறுமார்க்கமாக, ஜெய்ப்பூரில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 10.05 மணிக்கு புறப்பட்டு 4-வது நாள் காலை 8.30 மணிக்கு கோவை வரும் சிறப்பு ரெயில் சேவை (06182) வருகிற அக்டோபர் 19, 26 நவம்பர் 2, 9 ஆகிய தேதிகள் வரை (ஞாயிற்றுக்கிழமை) நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு நாளை (16.09.2025) காலை 8 மணிக்கு தொடங்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






